'வயிற்றுப் புண்ணுக்கு ஏற்ற உணவுகள் - Ulcer Diet in Tamil by Dr Maran, top Ulcer specialist in Chennai'

'வயிற்றுப் புண்ணுக்கு ஏற்ற உணவுகள் - Ulcer Diet in Tamil by Dr Maran, top Ulcer specialist in Chennai'
07:16 Jul 11, 2022
'#Ulcer #வயிற்றுப்புண் #diet  Visit https://springfieldwellnesscentre.com/ for reading many blogs on General health. You can read about the experiences of Dr Maran on his personal website at http://drmaran.com/  அல்சர் என்று கூறப்படும் வயிற்றுப்புண் இருந்தால் அதற்கு ஏற்ற உணவுகள் எவை என்பது குறித்து மருத்துவர் மாறன் இந்த காணொளியில் பேசுகிறார். எல்லோருக்குமே எந்த மாதிரி உணவுகளை சாப்பிடலாம் எந்த மாதிரி உணவுகளு தவிர்க்க வேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், அதனை பலரும் பின்பற்றுவதில்லை என்று மருத்துவர் கூறுகிறார். அடுத்ததாக சரியான வேளைக்கு (நேரம்) உணவு உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதற்கான காரணத்தையும் சொல்லுகிறார்.  எத்தனை மணிக்குள் காலை, மதியம், இரவு உணவுகளை முடித்துவிட வேண்டும் என்று மருத்துவர் மாறன் கூறுகிறார். இரவு நேரத்தில் சிறிதாகவே உணவு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். பசி எடுக்கும் நேரத்தில் தேநீர், காபி, வடை, போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளுவதற்கு பதில் சுண்டல், காய்கறி, பழங்கள் அடங்கிய சாலட் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறார். நார்ச்சத்து உள்ள தானியங்களை சாப்பிடலாம் என்று கூறுகிறார். காளிபிளவர், புரோக்கோலி, வெள்ளேரி போன்ற காய்கறிகள் உட்கொண்டால் ஏப்பம், வாயுத் தொல்லை இவைகளால்  அவதிப் பட நேரிடலாம் என்பதால் அதனை தவிர்க்குமாறு மருத்துவர் மாறன் நமக்கு அறிவுறுத்துகிறார். காரமான உணவுகளை தவிர்க்குமாறு சொல்லுகிறார். ஏனென்றால் இது புண் ஆறுவதை தள்ளிப் போடுகிறது என்று கூறுகிறார். சாக்லேட், பாலாடைக்கட்டி, போன்றவை வயிற்றில் ஜீரண அமிலம் சுரப்பதை அதிகப்படுத்தி அதனால் வயிற்றுப்புண் வலி அதிகரிக்க நேரிடலாம் என்று எச்சரிக்கிறார் மாறன் அவர்கள்.  முற்காலத்தில் வயிற்றுப்புண்ணுக்கு சில்லிட்ட பாலை கொடுப்பார்கள் என்று தகவல் தெரிவிக்கும் மருத்துவர் மாறன், அப்படி அது ஆகாத பட்சத்தில் அதனை சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறார். சிகரெட் குடிப்பது, மது குடிப்பது போன்ற பழக்கங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்.   You can visit Springfield Wellness Centre in the following social media channels too https://www.facebook.com/springfieldwellnesscentre/ https://plus.google.com/+SpringfieldWellnessCentreChennai https://twitter.com/drmaran https://www.youtube.com/channel/UCL4YMLjA7tCoHv4mK2U24vw https://www.linkedin.com/company/springfield-wellness-centre' 

Tags: Ulcer Treatment Chennai , Ulcer Treatment , Ulcer symptoms , Ulcer Treatment Dr Maran , Ulcer Clinic in Chennai , Ulcer Treatment Clinic Springfield Wellness Centre , Ulcer Diet , அல்சர் அல்லது வயிற்றுப்புண் , வயிற்றுப்புண் அறிகுறிகள் , அல்சர் அறிகுறிகள் , வயிற்றுப்புண் உணவுகள்

See also:

comments

Characters